INDIAN 7

Tamil News & polling

பல கேப்டன்கள் வாயில் சொல்வதை ரோகித் ஷர்மா செயலில் காட்டியுள்ளார் - கில்கிறிஸ்ட் பாராட்டு

26 ஜூன் 2024 08:15 AM | views : 693
Nature

உச்சகட்டத்தை நெருங்கியுள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக உண்மையான பரம எதிரியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய செமி ஃபைனலில் ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்கள் குவித்தார். அப்போட்டியில் முதல் ஓவரிலேயே விராட் கோலி அவுட்டாகியும் அதிரடியை நிறுத்தாத அவர் சுயநலமின்றி தன்னுடைய சொந்த சதத்தை பற்றி கவலைப்படாமல் 92 ரன்களில் அவுட்டானார்.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடியதால் தனது டி20 கேரியரை பற்றி கேள்வி கேட்டவர்களுக்கு ரோகித் சர்மா பதில் கொடுத்துள்ளதாக ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்று பல கேப்டன்கள் வாயில் சொல்வதை ரோகித் சர்மா செயலில் காட்டியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு. “நாங்கள் இப்படித்தான் விளையாடுவோம் என்ற கருத்துக்களை அவர் களத்திற்கு வெளியே சொல்கிறார். ஆனால் களத்திலும் அதை அவர் செய்வது மற்றவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய பொழுதுபோக்காகும். டி20 கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்தும் தாக்கம், ஐபிஎல் புள்ளி விவரங்கள் போன்றவற்றில் கேள்விக்குறி இருந்தது”

“ஆனால் தற்போதைய செயல்பாடு மீண்டும் அவருடைய தலைமையின் மதிப்பையும் அவரால் ஈர்க்கப்பட்ட ஒரு அணியின் மதிப்பையும் வலுப்படுத்துகிறது. ஒரு பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தெரிந்து செயல்படுகிறார். முடிவைப் பற்றி கவலைப்படாமல் செயல்முறையில் கவனம் செலுத்துவதாக அடிக்கடி பல கேப்டன்கள் சொல்வதை நாம் கேட்போம்”


“அதே போல அவரும் என்ன செயல்முறை செய்ய வேண்டும் என்பதை சொன்னார். எந்த சூழ்நிலையிலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பதே அவருடைய செயல்முறை. அதற்காக உங்களுடைய பேட்டிங் பார்ட்னரை (விராட் கோலி) இருந்தாலும் பரவாயில்லை அதிரடியான செயல்முறையில் கவனம் செலுத்துங்கள் என்பதே அவருடைய அணுகுமுறை. அந்த வகையான நிபுணத்துவம் மற்றும் பிளேயிங் லெவனில் அவர் கொடுக்கும் வழிகாட்டுதல் ஆகியவற்றை பின்பற்றி இந்திய அணி செல்கின்றனர்” என்று கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்