POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஓசூரில் விமான நிலையம் சாத்தியமே இல்லை அண்ணாமலை ஆவேசம்!

1 year ago 27 ஜூன் 2024 04:51 PM | views : 196
ஓசூரில் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் திரு. V.K. சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன.

இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாராளுமன்ற தேர்தல் பாமக கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS கோவை ரஜினிகாந்த் திருமாவளவன் இந்திய அணி UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பிரதமர் மோடி கைது EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் சீமான் COIMBATORE தமிழகம் KEERTHY SURESH THIRUMAVALAVAN தேவர் OPS வன்னியர் INDIAN CRICKET TEAM கொலை அமமுக NELLAI AJITH தென்காசி வடகிழக்கு பருவமழை SURIYA நெல்லை TAMIL ACTRESS கொரோனா PARLIAMENT ELECTION ஓபிஎஸ் மதுரை சூர்யா தமிழ்நாடு திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் BIGG BOSS TAMIL ELECTION COMMISSION அன்புமணி PRIME MINISTER MODI விடுமுறை மோடி அஜித் கீர்த்தி சுரேஷ் CSK ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை தூத்துக்குடி