INDIAN 7

Tamil News & polling

T20 உலககோப்பையை தட்டி தூக்கிய இந்திய அணி... ரோஹித் சர்மா வரலாற்று சாதனை!

29 ஜூன் 2024 06:16 PM | views : 721
Nature

2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

மோசமான தொடக்கம்
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 9 ஓட்டங்களில் மகாராஜா பந்தில் அவுட்டானார்.


அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட்(0) மற்றும் சூர்யகுமார் யாதவ்(3) என சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.


பின்னர் களத்தில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அக்சர் படேல் இந்திய அணியை தடுமாற்றத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.

அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

விராட் கோலி அதிரடி
ஆரம்பம் முதலே பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி மொத்தம் 76 ஓட்டங்கள் குவித்தார்.

58 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசி அவுட்டானார்.

அவரை தொடர்ந்து சிவம் தூபே 27 ஓட்டங்களும், பாண்டியா 5 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்துள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்