INDIAN 7

Tamil News & polling

இந்திய ரசிகர்களுக்காக 4 வருஷம் கடுமையாக உழைச்சோம்.. கேப்டன் ரோஹித் பேட்டி

30 ஜூன் 2024 03:29 AM | views : 893
Nature

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசின் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

ரோஹித் பாராட்டு:
அதனால் தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை படைத்தார். இந்நிலையில் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி பற்றி யாரும் எப்போதும் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா கடினமான நேரங்களில் பும்ரா செய்யும் அனைத்துமே மாஸ்டர் கிளாஸ் என்று பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 – 4 வருடங்களாக நாங்கள் என்ன செய்தோம் என்பதை விளக்குவது கடினம். அணியாகவும் தனி நபர்களாகவும் களத்திற்கு பின்னே நிறைய விஷயங்கள் நடந்தது. அதுவே இன்று வெற்றியை கொடுத்தது. இதை இன்று ஒரு நாளில் பெறவில்லை. கடந்த 3 – 4 வருடங்களாக கடினமாக உழைத்தோம். கடந்த காலங்களில் மிகவும் அழுத்தமான போட்டிகளில் விளையாடிய நாங்கள் தோல்வியை சந்தித்த பக்கத்தில் இருந்தோம்”

“ஆனால் அதை புரிந்து கொண்ட எங்கள் வீரர்கள் தேவைக்கு நிகராக செயல்பட்டது இன்று ஒரு எடுத்துக்காட்டு. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெல்வது போல் இருந்தாலும் எங்கள் வீரர்கள் போராடி வெற்றியை கொண்டு வந்தனர். இதற்கான பாராட்டு அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் செல்லும். விராட் கோலியின் ஃபார்ம் பற்றி யாரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பக் கூடாது”

“இன்று ஒருபுறம் அவர் நின்றது தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. நீண்ட காலம் விளையாடும் அவர் இன்றும் மாஸ்டர் கிளாஸ் செய்தார். அற்புதமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை அபாரமாக வீசினார். ஒவ்வொரு முறையும் பும்ரா மேஜைக்கை எடுத்து வருவது மாஸ்டர் கிளாஸ். நியூயார்க் முதல் பார்படாஸ் வரை எங்களுடைய ரசிகர்கள் ஆதரவு அற்புதமாக இருந்தது”



“இந்தியாவில் தற்போது இரவாக இருக்கும். ஆனால் அங்கே ரசிகர்கள் எங்கள் வெற்றியை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் எங்களைப் போலவே அவர்களும் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தனர்” என்று கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்