INDIAN 7

Tamil News & polling

2024 டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற மாபெரும் உலகசாதனைகள்

02 ஜூலை 2024 04:28 PM | views : 765
Nature

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி துவங்கி ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

அதன்படி நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை செய்தது.

அந்த வெற்றியோடு இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வினையும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து வீரர் பெர்குசன் நான்கு ஓவர்களையும் மெய்டன் ஓவராக வீசினார்.

ஒரு உலக கோப்பையில் இப்படி ஒரு வீரர் அசாத்தியமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது இதுவே முதல்முறை. மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக பவுண்டரிகள் விளாசபட்டன. அதுமட்டுமின்றி ஒரே டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்ததும் இந்த உலகக்கோப்பையில் தான்.

அந்த வகையில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்த வீரராக இருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை சக அணியும் வீரரான பூரான் முறியடித்து இருந்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவு 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்ட தொடராக இந்த தொடர் மாறியுள்ளது.


கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை துவங்கியதில் இருந்து இதுவரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக இந்த ஆண்டு மட்டும் தான் 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2012 ஆம் ஆண்டு 21 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்