INDIAN 7

Tamil News & polling

2028 ஒலிம்பிக் தொடரில் விராட், ரோஹித் விளையாடுவாங்க.. டிராவிட்டிடம் பேசிய மோடி

06 ஜூலை 2024 11:30 AM | views : 843
Nature

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக 17 வருடங்கள் கழித்து இந்தியா 2வது முறையாக டி20 உலகக் கோப்பை வென்றது. அந்த வெற்றியுடன் இந்தியாவின் நம்பிக்கையின் நாயகர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக இருந்தனர்.

கடந்த 10 வருடங்களில் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அவர்கள் தற்போது 35 வயதில் கடந்து விட்டனர். எனவே காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.

2028இல் கோலி, ரோஹித்:
முன்னதாக டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியை நரேந்திர மோடி ஜூலை 4ஆம் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி தங்கப்பதக்கம் வெல்வதே இந்தியாவின் மிகப்பெரிய பெருமை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“மோடிஜி ஒலிம்பிக் தொடரில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. அது நம் வீரர்களுக்கும் நாட்டுக்கும் வாரியத்திற்கும் மிகப்பெரியது. அத்தொடரில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டது பெருமையான தருணம்” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட மோடி பேசியது பின்வருமாறு.

“ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற இளம் வீரர்கள் 2028 ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக விளையாடுவார்கள்” கூறினார். அதாவது கவலைப்படாதீர்கள் ஒலிம்பிக் தொடரில் விராட் மற்றும் ரோகித் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ராகுல் டிராவிட்டிடம் அவர் ஜாலியாக சொன்னார். அதை கேட்டதும் அருகில் இருந்த விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் சிரித்தனர்.


இருப்பினும் ஏற்கனவே 37 வயதை ரோஹித் 2028இல் 41 வயதில் விளையாடுவது அசாத்தியமாக பார்க்கப்படுகிறது. வேண்டுமானால் யாராவது கோரிக்கை வைத்தால் விராட் கோலி 39 வயதில் நாட்டுக்காக ஓய்விலிருந்து மீண்டும் வந்து 2028 ஒலிம்பிக் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. சொல்லப்போனால் 128 வருங்கள் கழித்து சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடுவதை பார்க்க விரும்புவதாக ஒலிம்பிக் தொடரின் நிர்வாகி நிக்கோலோ கேம்பிரியனி 2023 அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்