POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே உலக சாதனை வெற்றி!

1 year ago 06 ஜூலை 2024 04:29 PM | views : 185
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசென்ட் கையா ஆரம்பத்திலேயே முகேஷ் குமார் வேகத்தில் டக் அவுட்டானார். அப்போது வந்து அதிரடி காட்டிய பிரையன் பெனெட்டை 22 (15) ரன்களில் அவுட்டாக்கிய ரவி பிஸ்னோய் மறுபுறம் தடுமாறிய வேஸ்லியையும் 21 ரன்களில் அவுட்டாக்கினார்.

சாதனை வெற்றி:
அதனால் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 17, டியோன் மேயர்ஸ் 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்களில் கிளைவ் மடாண்டே அதிரடியாக 29* (25) ரன்களை எடுத்தார். ஆனால் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவரில் ஜிம்பாப்வே 115/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 116 ரன்களை துரத்திய இந்தியா எளிதாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த ருதுராஜ் 7, ரியன் பராக் 2, ரிங்கு சிங் 0 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 22/4 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவுக்கு கேப்டன் கில் நிதானமாக விளையாடினார்.

ஆனால் எதிர்புறம் துருவ் ஜூரேல் 7 ரன்னில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் மறுபுறம் போராடிய கில்லும் 31 (29) ரன்களில் சிக்கந்தர் ராசா சுழலில் கிளீன் போல்டானார். அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முடிந்தளவுக்கு போராடி 27 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 19.5 ஓவரில் இந்தியாவை 102 ரன்களுக்கு சுருட்டிய ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் டி20 உலகக் சாம்பியனான இந்தியாவை தோற்கடித்த ஜிம்பாப்வே 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்கை (116) வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வென்ற அணியாக ஜிம்பாப்வே உலக சாதனை படைத்துள்ளது.


இதற்கு முன் 2016இல் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 127 ரன்கள் கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும். அந்த அணியின் இந்த சரித்திர வெற்றிக்கு அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் சத்தாரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் கனமழை TAMIL NADU மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் PMK AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கைது திருமாவளவன் ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழகம் சட்டசபை தேர்தல் கோவை CONGRESS இந்திய அணி EDAPPADI PALANISWAMI COIMBATORE UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM KEERTHY SURESH பிரதமர் மோடி OPS கொலை அமமுக வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN சீமான் தேவர் வன்னியர் TAMIL ACTRESS தென்காசி ஓபிஎஸ் NELLAI நெல்லை AJITH SURIYA தீபாவளி ASSEMBLY ELECTIONS PARLIAMENT ELECTION தமிழ்நாடு மதுரை திருப்பரங்குன்றம் சூர்யா மோடி CSK பாலியல் தொல்லை NORTHEAST MONSOON PRIME MINISTER MODI BIGG BOSS TAMIL அஜித் கீர்த்தி சுரேஷ் அன்புமணி கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி MADURAI ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல்