INDIAN 7

Tamil News & polling

நாளைக்கே ஸ்ரீசாந்த்தை.. வீட்டுக்கு அனுப்புங்கன்னு கோபத்தில் தோனி சொன்ன வார்த்தை!

13 ஜூலை 2024 04:46 AM | views : 952
Nature

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களை அவர் இந்தியாவுக்காக கேப்டனாக வென்றுள்ளார். அதனால் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை அவர் படைத்துள்ளார்.

பொதுவாகவே களத்தில் அழுத்தமான சூழ்நிலைகளை கூலாக கையாளுவதில் வல்லவரான தோனி சில நேரங்களில் பொறுமையை இழந்து கோபப்பட்ட தருணங்களும் உள்ளது. அந்த வகையில் 2010ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிபெர்ஹா நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரீசாந்த் அவரை கோபமடைய வைத்த பின்னணியை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.


அந்தப் போட்டியில் தம்மை போல ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ரீசாந்தை தண்ணீர் பாட்டில்களை தூக்குவதற்காக பவுண்டரி எல்லையில் தோனி அமருமாறு சொன்னதாக அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காத ஸ்ரீசாந்த் மாடியில் மசாஜ் செய்துகொள்ள சென்றதாக அஸ்வின் கூறியுள்ளார். அதனால் கோபமடைந்த தோனி உடனடியாக நாளை ஸ்ரீசாந்தை நாட்டுக்கு திருப்பியனுப்புங்கள் என்று சொன்னதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “தோனியிடம் நான் ஸ்ரீசாந்த் உடைமாற்றும் அறையின் மாடியில் இருக்கிறார் என்று சொன்னேன். அப்போது மாடியில் இருந்து கீழே இறங்கி மற்ற ரிசர்வ் வீரர்களுடன் உட்காருமாறு ஸ்ரீசாந்திடம் சொல்லுங்கள் என்று தோனி என்னிடம் சொன்னார். அதன் பின் நான் தண்ணீர் தூக்கும் எனது வேலைக்கு திரும்பினேன்”

“அதற்கடுத்த முறை தோனி ஹெல்மெட் கேட்டார். அப்போது தோனி கோபமாக இருந்தது என்னால் உணர முடிந்தது. அவர் அப்படி கோபமாக இருந்து நான் பார்த்ததில்லை. அப்போது என்னிடம் ஸ்ரீசாந்த் எங்கே? என்ன செய்கிறார்? என்று மீண்டும் தோனி கேட்டார். அதற்கு ஸ்ரீசாந்த் மசாஜ் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னேன்”


“அப்போது எதுவும் சொல்லாத தோனி அந்த ஓவர் முடிந்ததும் மீண்டும் ஹெல்மெட் மாற்றும் போது “ஒன்று செய். ரஞ்சிப் சாரிடம் (மேனேஜர்) சென்று ஸ்ரீசாந்த் இங்கே இருப்பதற்கு விரும்பவில்லை எனவே நாளை அவரை இந்தியாவுக்கு அனுப்ப விமான டிக்கெட்டை புக் செய்யுமாறு சொல்” என்று என்னிடம் சொன்னார். அவர் அப்படி சொன்னதை நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவரது முகத்தைப் பார்த்தேன். அதற்கு என்னிடம் மீண்டும் நான் சொல்லும் ஆங்கிலம் புரியவில்லையா? என்று தோனி கோபமாக சொன்னார். அதனால் ஸ்ரீசாந்த் உடையை போட்டுக்கொண்டு அடுத்த முறை தோனி தண்ணீர் கேட்ட போது கொண்டு செல்ல தயாராக இருந்தார்” என்று கூறியுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்