Tamil News & polling
சென்னை மாதவரத்தில் அதிகாலையிலேயே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்து சென்ற நேரத்தில் ரவுடி ஒருவர் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் திருவேங்கடம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். ரவடி திருவேங்கடம் என்கவுண்டரை தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய உள்ளார். சமீபத்தில் புதுக்கோட்டை அருகே திருச்சி ரவுடி துரை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் போலீசாரின் அடுத்தடுத்த என்கவுண்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். சுமார் 20 ஆண்டுகளாக அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி இரவு பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் 11 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்து வருகின்றனர்.
புளியந்தோப்பைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரான தென்னரசு கடந்த 2015ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் தரப்பால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் எனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல் என்னையும் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் ஏற்பட்ட பயத்தில் மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஆம்ஸ்ட்ராங் தரப்பு என்னை கொலை செய்வதற்கு முன்பும், எனது அண்ணன் கொலைக்கு பழி தீர்க்கவும் அவரை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress