INDIAN 7

Tamil News & polling

300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!

15 ஜூலை 2024 07:23 AM | views : 1001
Nature

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் 40 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

இப்படி சிக்கலில் சிக்கிய இந்திய அணியை மீட்டெடுத்து அணியின் ஸ்கோரை கட்டமைக்க யாராவது ஒருவர் நிலைத்து விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான்காவது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இப்படி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அடித்த நான்கு சிக்ஸர்கள் மூலம் முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோருடன் இணைந்து ஒரு முக்கியமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார்.


இதுவரை 276 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 302 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா 448 டி20 போட்டிகளில் விளையாடி 525 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 399 டி20 போட்டியில் விளையாடி 416 சிக்ஸர்களையும், மகேந்திர சிங் தோனி 338 சிக்ஸர்களையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்