இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூலை 20, 2024 சனி || views : 580

இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

இலங்கைக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழுவும் கௌதம் கம்பீரும் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதை விட இலங்கை டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சமீபத்திய ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க தொடரில் அந்த மூவருமே மிகச் சிறப்பாக விளையாடி நல்ல ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர். மறுபுறம் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக விளையாடிய சுப்மன் கில் தமது ஓப்பனிங் இடத்தை அபிஷேக் ஷர்மாவுக்கு கொடுக்கவில்லை.

அத்துடன் 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடாத அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அப்படி சுயநலமாக நடந்து கொண்ட அவருக்கு இலங்கைத் தொடரில் துணை கேப்டன் பதவி கிடைத்துள்ளது. ஆனால் ருதுராஜ், அபிஷேக், சாம்சன் ஆகியோருக்கு பெஞ்சில் அமரும் கூட வாய்ப்பு கிடைக்காதது தான் தற்போது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் தான் மேற்குறிப்பிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2 அணிகளிலும் ருதுராஜ் சேர்க்கப்படவில்லை. தம்முடைய பெயர் இல்லாத அளவுக்கு ருதுராஜ் அப்படி என்ன செய்தார்? 6 மாதத்திற்கு முன்பாக சுப்மன் கில் விளையாடாத போது அவர் அடுத்த கேப்டனாக தயாராக இருந்தார்”

“ஆனால் தற்போது ருதுராஜ் அணியிலேயே இல்லை. கில் துணை கேப்டனாக வந்துள்ளார். இது நியாயமா? இருப்பினும் அப்போதிருந்த தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் வேறு திட்டத்தை வைத்திருந்திருப்பார்கள். ஆனால் இப்போது வந்துள்ள புதிய பயிற்சியாளர் வேறு ஏதாவது சிந்தித்து செயல்படுத்த விரும்புகிறார் என்று தெரிகிறது. இல்லையென்றால் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் இப்படி வருத்தத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்”

“அதே போல உலகக் கோப்பையில் ஒரு அங்கமாக இருந்த சஹால் இப்போது இல்லை. ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் இல்லை. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக உள்ளார். ஆனாலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதிலிருந்து அணி நிர்வாகம் வேறு பாதையை நோக்குகிறது என்பது தெரிகிறது” என்று கூறினார்.

AAKASH CHOPRA ABHISHEK SHARMA GAUTAM GAMBHIR INDIAN CRICKET TEAM RUTURAJ GAIKWAD SANJU SAMSON ஆகாஷ் சோப்ரா கெளதம் கம்பீர் ருதுராஜ் கெய்க்வாட்
Whatsaap Channel
விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

விடுகதை :

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next