INDIAN 7

Tamil News & polling

இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!

25 ஜூலை 2024 11:32 AM | views : 925
Nature

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முதல் முறையாக கம்பீர் செயல்பட உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் இரண்டு வெவ்வேறு அணிகள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்க்கும் அதிகரித்துள்ளது.

இந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்பானது வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லகல்லேவில் துவங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்கி விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு டி20 உலக சாம்பியனான இந்திய அணி இலங்கை அணியை வாஷ் அவுட் செய்யும் முனைப்போடு களமிறங்க உள்ளதால் இந்த தொடரானது இலங்கை அணிக்கு மிக கடினமான தொடர் என்று கூறலாம். இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

அந்த வகையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகள் இலங்கையில் நடைபெறுவதால் இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக சோனி குழும தொலைகாட்சிகள் மட்டுமே இந்த போட்டியை பார்க்க முடியும்.


அதே வேளையில் ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் சோனி லைவ் ஆப்பை பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு காசு கட்ட வேண்டும். ஒருவேளை போட்டிகளை ஆன்லைனில் இலவசமாக பார்க்க வேண்டுமெனில் ஜியோ ஆப்பின் மூலம் சோனி சேனல்களை வைத்து இலவசமாக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்