இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. தம்புலா நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் அதிரடியாக விளையாடினார்.
அந்த வகையில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்திய இந்த ஜோடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் சுப்மன் கில் 34 (16) ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 40 (21) ரன்களும் விளாசி அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அதில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் தம்முடைய ஸ்டைலில் அதிரடி காட்டிய சூரியகுமார் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58 (26) ரன்களை விளாசினார். அப்போது அவரை அவுட்டாக்கிய பதிரனா அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியாவையும் 9 (10) ரன்களில் காலி செய்தார்.
அந்த நிலையில் ரிசப் பண்ட் மறுபிறம் அதிரடியாக விளையாடிய அரை சதத்தை நெருங்கினார். எதிர்புறம் வந்த ரியான் பராக்கை 7 ரன்களில் காலி செய்த பதிரனா மறுபுறம் அசத்திய ரிஷப் பண்டை 49 (33) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை மண்ணில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் 1 ரன்னில் தவற விட்டார்.
ஏனெனில் இதுவரை இலங்கை மண்ணில் டி20 கிரிக்கெட்டில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் அரை சதமடித்ததில்லை. இறுதியில் அக்சர் படேல் 10* ரன்கள் ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் இந்தியா 213/7 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது. இருப்பினும் இப்படி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளை அதிக டி20 போட்டிகளில் வென்றுள்ளது. எனவே அதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராடுகிறார்கள்.
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!