INDIAN 7

Tamil News & polling

இந்தியாவுக்கு தைரியம் இருந்தா இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும்... தன்வீர் அஹ்மத்

29 ஜூலை 2024 08:56 AM | views : 885
Nature

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் அந்நாட்டுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது.

அந்த வரிசையில் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது. எனவே இம்முறையும் பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதால் தங்களின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த சூழ்நிலையில் வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி, சோயப் மாலிக், யூனிஸ் கான் உள்ளிட்ட பல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் வீரர்களும் சிங்கத்தைப் போன்ற தைரியத்தை கொன்றவர்கள் என முன்னாள் வீரர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார். அதனாலேயே இந்தியாவுக்கு சென்று 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அதே போன்ற தைரியம் இருந்தால் இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் நாங்கள் முழு பாதுகாப்பை கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தன்வீர் அஹ்மத் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சிங்கங்கள். அதனாலேயே நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட்டில் விளையாடினோம்”

“அதே போல நீங்களும் இங்கே வந்து தைரியத்தை காட்டுங்கள். நாங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து விளையாட உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களுக்கு போதுமான பாதுகாப்பு உட்பட அனைத்தையும் கொடுப்போம். எங்கள் நாட்டுக்கு ஒரு முறை வாருங்கள். இருப்பினும் இதைப் பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர்”


“பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே வெற்றி தோல்வியை பார்க்காமல் எப்படி விளையாடுகிறோம் என்பதை சிந்திக்காமல் அனைத்து இடங்களிலும் சென்று விளையாடுகின்றனர். அந்த வகையில் இந்தியாவிற்கு சென்று விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் வந்தனர். இதைத் தான் நீங்கள் தைரியமான அணி தைரியமான வீரர்கள் என்று சொல்வீர்கள்” எனக் கூறினார். ஆனாலும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடக்கூடாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்