INDIAN 7

Tamil News & polling

எனக்கு சூப்பர் ஓவர் வாய்ப்பை தருவாருன்னு நினைக்கல.. வாஷிங்டன் சுந்தர் பாராட்டு

31 ஜூலை 2024 08:27 AM | views : 686
Nature

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்த இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் போராடி 137/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கில் 39, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 46, குசால் பெரேரா 42 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், கேப்டன் சூரியக்குமார், ரிங்கு சிங், ரவி பிஸ்னோய் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

எல்லா பாராட்டும்:
அதைத்தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து இலங்கையை ஆல் அவுட்டாக்கினார். பின்னர் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இப்போட்டியில் மொத்தமாக 4 விக்கெட்டுகளும் 25 ரன்கள் அடித்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு கேப்டன் சூரியகுமார் தான் முக்கிய காரணம் என்று சுந்தர் பாராட்டியுள்ளார். சூப்பர் ஓவரை அவர் தமக்கு கொடுப்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என தெரிவிக்கும் சுந்தர் கடவுளுக்கும் நன்றி கூறியுள்ளார். இது பற்றி சுந்தர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் இது சூரியகுமாரின் அபாரமான கேப்டன்ஷிப். 12 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது ரிங்கு சிங்கை அவர் கொண்டு வந்தார்”

“குசால் பெரேரா சிறப்பாக பேட்டிங் செய்த போது ரிங்கு அவரை அவுட்டாக்கினார். பின்னர் சூர்யா கடைசி ஓவரில் வந்து எங்களை வெற்றி பெற வைத்தார். பேட்டிங்கில் அவர் பெரிய இதயத்தை கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இன்று அவர் தன்னுடைய கேப்டன்ஷிப்பிலும் அதை காண்பித்துள்ளார். எனவே அனைத்து பாராட்டுகளும் அவரை சேரும. இது போன்ற குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் மிடில் ஓவர்களில் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தால் கூட வெற்றி மாறிவிடும் என்று சூர்யா எங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்”


“ஏனெனில் இது போன்ற அழுத்தமான போட்டியில் பந்துக்கு நிகரான ரன்கள் எடுப்பது கூட கடினம். இப்போட்டியை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இது போன்ற போட்டிகள் அடிக்கடி நடக்காது. உண்மையில் பேட்ஸ்மேன்கள் வந்த பின்பு கூட சூப்பர் ஓவர் வீசுவேன் என்ற ஐடியா எனக்கு இல்லை. ஆனால் சூர்யா தான் நீங்கள் வீசுங்கள் என்று பந்தை கொடுத்தார். அந்த வாய்ப்பில் நாட்டுக்காக அசத்தியதற்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்