INDIAN 7

Tamil News & polling

மீண்டும் நாங்குநேரியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு!

02 ஆகஸ்ட் 2024 09:55 AM | views : 1112
Nature

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான வளாகத்தில் கேந்திரி வித்தியாலயா பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 9ஆம் வகுப்பில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று பள்ளியில் மோதல் ஏற்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த மாணவன், நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளார். இதனை நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக சக மாணவர்கள் உள்ளிட்டோர் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர். ஆனால் கோபம் ஆறாமல் இருந்த நாங்குநேரியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன், தன் வீட்டில் இருந்த சிறிய ரக அரிவாளை பள்ளிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு தன்னுடன் மோதலில் ஈடுபட்ட மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த சக மாணவனை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இது பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த மாணவன் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் இப்போது நலமாக இருக்கும் நிலையில், தப்பியோடிய சக மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் சக மாணவனை இன்னொரு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்ற சம்பவம் வள்ளியூர் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நடைபெற்றது. சாதிய வன்மத்துடன் இரு தரப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், 22 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அடுத்தடுத்து பள்ளிகளில் மாணவர்கள் சாதிய வன்மத்துடன் மோதிக் கொள்ளும் சம்பவம் தென் மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பள்ளி வளாகத்தில் சாதிய மோதலை தடுக்கவும், பாகுபாடின்றி மாணவர்கள் கல்வியை அமைதியான சூழலில் பயில்வதை உறுதி செய்யவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வி பயில வரும் மாணவர்கள் சாதிய வன்மத்துடன் பள்ளி வளாகத்திலேயே மோதிக் கொள்ளும் சம்பவம் சாதாரணமாக அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது, இப்படியான விஷயங்களை முளையிலேயே கிள்ளியெறிய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்