முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிலச்சரிவில் இருந்து தப்பிய தனது அனுபவத்தை பற்றி சுஜாதா கூறியதாவது:-கடந்த திங்கள்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.
எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.
காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன.
சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். இவ்வாறு அவர் கூறினார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!