INDIAN 7

Tamil News & polling

சவால்விட்ட இலங்கை கேப்டன்... 2 அதிரடி மாற்றங்களுடன் இந்திய அணி!

07 ஆகஸ்ட் 2024 09:04 AM | views : 784
Nature

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை சமன் செய்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இலங்கை டி20 தொடரில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் இத்தொடரின் 3வது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொழும்பு நகரில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.

அதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங்கை அணியில் அகிலா தனஞ்செயாவுக்கு பதிலாக முதன்மை ஸ்பின்னர் தீக்சனா விளையாட உள்ளதாக கேப்டன் அசலங்கா அறிவித்தார்.

இந்திய அணி:
அத்துடன் முதலிரண்டு போட்டிகளைப் போலவே டாஸ் வென்ற தாங்கள் அதே கொழும்பு பிட்ச்சில் 3வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று அசலங்கா சவால் தெரிவித்தார். மறுபுறம் இந்திய அணியில் ரியான் பராக் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெறுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதே போல விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.

அந்த இருவர் உள்ளே வந்ததால் அர்ஷ்தீப் சிங் மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டனர். மற்றபடி கடந்த போட்டியில் விளையாடிய எஞ்சிய அனைத்து வீரர்களும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். இது பற்றி இலங்கை கேப்டன் அசலங்கா பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். பிட்ச் முதல் 2 போட்டிகளைப் போலவே இருக்கிறது”

“தனஞ்செயாவுக்கு பதிலாக தீக்சனா அணிக்குள் வந்துள்ளார். எங்களுடைய வீரர்கள் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். எனவே வெற்றி பெறுவதற்கு தேவையான நல்ல இடத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்த பிட்ச்சில் எங்கள் வீரர்களில் ஒருவர் சதமடிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியது பின்வருமாறு.


“கடந்த 2 போட்டிகளில் எங்களுக்கு சவால் விடுக்கப்பட்டது. நாங்கள் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அசத்த வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது. அதை நாங்கள் சரி செய்துள்ளதால் இம்முறை அணியாக சேர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நிலையை அறிந்து செயல்பட்ட எதிரணிக்கு நீங்கள் பாராட்டு கொடுக்க வேண்டும். இது எங்களை சரி செய்து கொள்ள கிடைத்த மற்றொரு வாய்ப்பு. ரிஷப் பண்ட், ரியான் பராக் ஆகியோர் ராகுல், அர்ஷ்தீப் ஆகியோருக்கு பதிலாக” வருகின்றனர் என்று கூறினார்.

Like
1
    Dislike
1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்