INDIAN 7

Tamil News & polling

தகுதியற்ற இலங்கை அணியிடம் நம்பர் ஒன் அணியான இந்தியா தோத்துடுச்சே.. ரசிகர்கள் வேதனை

08 ஆகஸ்ட் 2024 07:50 AM | views : 771
Nature

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் அதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக முதல் போட்டியிலேயே வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசியில் வெறும் 231 ரன்களை தொட முடியாமல் சமன் செய்தது. 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 241 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் 3வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

தகுதியில்லாத இலங்கையிடம்:
அதனால் 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோற்றது. இத்தனைக்கும் இலங்கையை விட இந்திய அணியில் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட வீரர்களால் கூட வெறும் 250 ரன்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்திய அணி டாப் 5 இடங்களில் கூட இல்லாத இலங்கையிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அதை விட 2023 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய இலங்கை அணியால் டாப் 8 இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கை தகுதி பெறவில்லை. ஆனால் தற்போது 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட தகுதியற்ற இலங்கை அணியிடம் நம்பர் ஒன் அணியான இந்தியா மண்ணைக் கவ்வியுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இன்னும் 6 மாதத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெற உள்ளது.


ஆனால் அதற்கு முன்பாக இந்தியா வெறும் 3 ஒருநாள் போட்டியில் மட்டுமே அதுவும் 2025இல் விளையாட உள்ளது. ஆனால் தற்போது தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அதற்குள் எப்படி தங்களுக்கு தேவையான தரமான வீரர்களையும், அவர்களுக்கு தகுந்த இடத்தையும் கண்டுபிடிக்கப் போகிறது? என்பது கேள்விக்குறியாகும். எனவே இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவை புதிய பயிற்சியாளர் கம்பீர் வெற்றி நடை போட வைப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்