பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து விளையாடிய வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிரை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து காலிறுதிச் சுற்றில் அல்பேனிய வீரர் அபாகரோஃபை எதிர்கொண்ட அமன் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அரையிறுதியில் ஜப்பான் வீரர் ரே ஹிகுச்சியுடன் மோதினார்.
இதில், ஆட்டம் தொடங்கிய இரண்டே நிமிடங்களில் அமன் 0-10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அமன் ஷெராவத், போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த டேரியன் க்ரூஸுடன் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் 13-5 என்ற கணக்கில் அமன் ஷெராவத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் முதல் பதக்கமும் ஒட்டுமொத்தமாக 6-வது பதக்கம் கிடைத்துள்ளது.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!