இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஒரு மாதம் இந்திய அணியினர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள 2024 துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் போதுமான அளவு அனுபவத்தை கொண்டுள்ளனர். அதனால் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முந்தைய பயிற்சியாளர்கள் அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொன்னதில்லை.
ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் அந்த நிலைமையை மாற்றியுள்ளார். ஆம் நிறைவு பெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக விளையாடியாக வேண்டும் என்று சொன்ன கௌதம் கம்பீர் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கை தொடரில் விளையாட வைத்தார்.
அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமானவர் என்பதால் அவருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டதாக கம்பீர் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் 6 போட்டிகளைக் கொண்ட துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சென்னையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே அதற்கு தயாராக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ துலீப் கோப்பையில் விளையாட வைக்க உள்ளது.
இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் அந்தத் தொடரில் விளையாட உள்ளன. அந்த 4 அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் போன்ற பெரும்பாலான நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அந்த 4 அணிகளை தேர்வுக்கு குழுவினர் விரைவில் தேர்ந்தெடுத்து வெளியிடுவார்கள்.
மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டுமே அந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அந்த வகையில் நீண்ட காலம் கழித்து நட்சத்திர வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடப் போகும் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!