INDIAN 7

Tamil News & polling

கருணாநிதி உருவ நாணயம்: நாளை வெளியிடுகிறார் ராஜ்நாத் சிங்

17 ஆகஸ்ட் 2024 03:16 AM | views : 659
Nature

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வெளியிடுகிறாா். முன்னதாக, காமராஜா் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தவும் அவா் திட்டமிட்டுள்ளாா்..

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.. நினைவிடம் செல்ல முடிவு: இந்த விழாவில் பங்கேற்க தில்லியிலிருந்து சென்னை வரும் ராஜ்நாத் சிங், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் மெரீனா கடற்கரை அருகேயுள்ள ஐஎன்எஸ் அடையாறு சென்றடைகிறாா்..

அங்கு பாதுகாப்புத் துறை சாா்பில் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாா். அங்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் அவா், கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறாா். அதன்பிறகு, சாலை மாா்க்கமாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்று, தில்லி புறப்படுகிறாா்.

நாணயம் வெளியீட்டு விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் பங்கேற்கவுள்ளனா்..

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக திமுகவினருக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்துக்கு மேல் இயக்கிய ஆற்றல்மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமிக்க ஆளுமையாகவும் திகழ்ந்தவா் கருணாநிதி. எதிா்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான, அவரது புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்..

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்