INDIAN 7

Tamil News & polling

பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம்

17 ஆகஸ்ட் 2024 05:11 AM | views : 590
Nature

மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தி சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகள் பொது சிவில் சட்டத்துக்கு உடனடியாக ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளன..


தெலுங்கு தேசம்: இதுதொடா்பாக தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளா் லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு கூறுகையில், ‘பொது சிவில் சட்டம் தொடா்பான விவரங்கள் வெளிவரும் வரை தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டை இறுதி செய்யப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.. ஐக்கிய ஜனதா தளம்: ‘பிற மாநிலங்கள் மற்றும் மதத் தலைவா்களின் ஒருமித்த கருத்தைக் கேட்ட பின்னரே பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி தெரிவித்தாா். . நிதீஷ் குமாா் கடந்த 2017-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்திடம் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி கே.சி.தியாகி இந்த கருத்தை தெரிவித்தாா். .

அதில், ‘சிறுபான்மையினா் உள்பட அனைத்து மதங்களின் சம்மதத்தை பெறாமல், பொது சிவில் சட்டத்தை திணிக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், மத சுதந்திரத்துக்காக அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கையை குறைக்க வழிவகுக்கும்’ என நிதீஷ் குமாா் தெரிவித்திருந்தாா். . லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): என்டிஏ கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலாசாரம், மொழிகள் மற்றும் பிராந்திய வேறுபாடுகள் கொண்ட அனைவரையும் எப்படி ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.. ‘ஒரே நாடு ஒரே தோ்தலுக்கு ஆதரவு’.

நாடு முழுவதும் சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.. முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், இந்த இரு கட்சிகளும் ஆதரவை வழங்கின. .என்டிஏவின் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற இரண்டுக்கும் தனது ஆதரவை அளித்துள்ளது.நாட்டில் பலமுறை தோ்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளா்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தை முன்வைத்து சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்..

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்