INDIAN 7

Tamil News & polling

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்: ஆகஸ்டு 18- சென்னை முழுவதும் உஷார் நிலை

17 ஆகஸ்ட் 2024 09:15 AM | views : 604
Nature

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.


இது தொடர்பாக அரக்கோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றை கண் ஜெய பால் மற்றும் நெல்லை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடிகள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் உதவி செய்திருப்பதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 5-ந் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று, சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலுவுடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

நாளை ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் போலீ சார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்