அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜகோபால் தலைமையில் முத்தரசநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில்கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிமுக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட்ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராமு, ஒன்றிய கழகச் செயலாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, கழக பொதுச் செயலாளர் வருங்கால தமிழகத்தின் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உங்களிடத்தில் நேரடியாக கொடுப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சி இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நமது திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை பொருத்தவரையில் 4 லட்சம் உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை நாம் ஒவ்வொரு ஒன்றியம் நகரம் பகுதி கழகம் பேரூர் கழகம் வாரியாக ஒவ்வொரு ஊராட்சியாக சென்று கழக நிர்வாகிகள் உறுப்பினர்களிடத்திலே கழகப் பொது செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க நாம் இந்த உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை நேரில் சென்று உங்களிடத்திலே வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
2நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை கழக பொது செயலாளரை குறித்து அவதூறாக கருத்துக்களை அங்கே வெளியிட்டார். அண்ணாமலை தமிழக அரசியலிலே ஒரு தற்குறி அண்ணாமலைதான் என்பதை அவருடைய பேச்சு இன்றைக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பொதுமக்களும் அரசியல் விமர்சகர்களும் பல அரசியல் கட்சியினுடைய தலைவர்களும் கூறிக் கொண்டிருக்க கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அண்ணாமலை இந்த பாரதிய ஜனதா கட்சிக்கு அதுவும் அண்ணாமலை அரசியலுக்கே வந்து மூன்று வருடம் கூட முடியவில்லை, நம் கிராமத்தில் சொல்லுவாங்க முளைச்சு மூணு இலை கூட விடல அதுக்குள்ள இந்த ஆட்டம் போடுது என்று சொல்வார்கள். அது போல அண்ணாமலை அரசியலுக்கு வந்து மூன்று வருடம் கூட ஆகவில்லை, ஆனால் இன்றைக்கு நமது கழகப் பொதுச் செயலாளரை பற்றி விமர்சனம் செய்கிறார்.
அண்ணாமலை அரசியலில் ஒரு குழந்தைத்தனமாக இருக்கிறார் 1984, அப்போதுதான் அண்ணாமலையே பிறந்திருக்கிறார். ஆனால் நம்முடைய கழக பொதுச் செயலாளர் 50ஆண்டு காலம் அரசியலில் அனுபவம் பெற்றவராக இன்றைக்கு 1984ல் பிறந்த அண்ணாமலைக்கு இப்பொழுது வயது 40தான் ஆகியிருக்கிறது. அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் என பார்த்தால் மூன்று வருடம் கூட இல்லை.
இப்படிப்பட்டவர் 50ஆண்டுகாலம் அரசியலிலே நெடிய அனுபவம் கொண்ட பொதுச் செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்று சொன்னால், அரசியலிலே அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி ஒரு குழந்தை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் 4ம் இடத்திற்கு வந்து விடும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார் நம் கழகத்திலே இருக்கக்கூடிய 2கோடியே 20 லட்சம் தொண்டர்கள் எடப்பாடியாரை தமிழக முதலமைச்சராக ஆக்குவதற்கு அல்லும், பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்ணாமலைக்கு நாம் நினைவுபடுத்திக்கின்றோம்.
அது மட்டும் அல்ல, அண்ணாமலை இன்னொரு கருத்தையும் சொல்லுகிறார் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகின்ற பொழுது வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கழக பொதுச் செயலாளர் அழைத்தோம் அப்பொழுது அவர் தோற்கக்கூடிய வேட்பாளருக்கு நான் ஏன் வர வேண்டும் என்று நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் சொன்னதாக ஒரு வடிகட்டின பொய்யை அந்தக் கூட்டத்தில் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு பல கட்சியினரும் தயக்கம் காட்டினார்கள் எந்த மாநில கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு தயாராக இல்லை.
ஆனால் இந்த நாட்டினுடைய பிரதமராக மோடி வரவேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்த ஒரே தலைவர் நம்முடைய கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தான் என்பதை கத்துக்குட்டி அண்ணாமலைக்கு நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அது மட்டுமல்லாமல் இன்னொன்றும் சொல்லுகிறார் நான் பத்து வருடம் பச்சை இங்கிள் கையெழுத்து போட்டேன் என்று ஆனால் நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் எத்தனை வருடம் பச்சை இங்கில் கையெழுத்து போட்டிருக்கிறார் என்பதை அண்ணாமலைக்கு நினைவு படுத்த வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, வாரிய தலைவராக, அமைச்சராக, நான்கரை ஆண்டு காலம் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பச்சை இங்கில் கையெழுத்து போட்டவர் தான் எடப்பாடியார்.
அண்ணாமலை நான் ஐபிஎஸ் ஐபிஎஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ எப்படி ஐபிஎஸ் படித்தியோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். காவல்துறையை பொறுத்தவரையில் அடிப்படை. பதவி என்று சொனால் அது கான்ஸ்டபிள் . .காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருக்க கூட தகுதி இல்லாத தரம் இல்லாதவர் தான் அண்ணாமலை.
அண்ணாமலை பாதயாத்திரை சென்றார். சுதந்திரத்திற்கு முன்னாடி காந்தியின் ஆரம்பித்து எத்தனையோ தலைவர்கள் பாதயாத்திரை போனார்கள் ஆனால் அண்ணாமலை போனது பாதயாத்திரை அல்ல அது ஒரு வசூல் யாத்திரை.
எல்லா மாவட்டத்திலும் அவர் நடந்தது எவ்வளவு நேரம் என்று பார்த்தீர்கள் என்றால் இரண்டு கிலோமீட்டர் நடப்பார் இந்த இரண்டு கிலோமீட்டர் நடப்பதற்கு அங்கே இருக்கக்கூடிய தொழில் அதிபர்கள், பல முதலாளிகளிடம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்தவர் தான் இந்த அண்ணாமலை. கழக பொது செயலாளர் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை இந்த கூட்டத்தில் வாயிலாக கழகத்தின் தொண்டர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தமிழகத்தினுடைய முதலமைச்சராக வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் அண்ணாமலையினுடைய சுயரூபம் மக்கள் இன்றைக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை அவருடைய தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்ற மாதிரி பேசுவார் ஆனால் கருணாநிதியுடைய நாணயம் வெளியிட்டு விழாவில் அவருடைய சமாதியில் போய் எந்த அளவிற்கு அடிபணிந்து கிடந்தார் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களோடு ரகசியமான உறவு வைத்துக் கொண்டு பல ஆதாயங்களை பெறக்கூடியவராக அண்ணாமலை இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் ஒரு விழா அந்த விழாவில் அமைச்சர் ஏ.வா.வேலுவும் அண்ணாமலையும் எந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ரகசியமாக உறவாடினார்கள் என்பது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
எனவே அரசியலிலே கொள்ளை அடிப்பதை மட்டும் ஒரு திட்டமாக வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்வதை போல விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய அண்ணாமலை எடப்பாடியாரை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என்பதை இந்த நேரத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லுகின்றோம்.வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலோடு அண்ணாமலையினுடைய அரசியல் வாழ்க்கை முடித்து வைக்கப்படும் என்றார்.
சாத்தியம்
சாத்தியம் இல்லை
கருத்து இல்லை
அஜித்
தோனி
இருவரும்
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
சென்னை: சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளன. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,300
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாரம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் மாற்றப்பட்டது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சீதாரம் யெச்சூரி தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று (செப்.12) காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம்
இன்று அதிகாலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ரா பாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் கல்லூரி
1957 செப்டம்பர் 14 கீழத்தூவவில் ஐவர் போலீசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து கீரந்தை, உளுத்திமடை, மழவராயனேந்தல் என்று பல கிராமங்களிலும் சனங்கள் போலீசாரால் சுட்டுப் படுகொலை செயப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும் கருணை மிகு கர்ம வீரர் காமராசர் ஆட்சியிலே தான் நடந்தது . மொத்தம் 17 பேர் சுட்டுக்
ராமேசுவரம் : தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 47 கி.மீ முதல் 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது.
கோவை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகரில் இன்று (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பேரூர்
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இம்பால்: மணிப்பூரில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சமீபத்திய வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிர வன்முறையின் காரணமாக, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தௌபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல கேப்டன்கள் வாயில் சொல்வதை ரோகித் ஷர்மா செயலில் காட்டியுள்ளார் - கில்கிறிஸ்ட் பாராட்டு
விராட் கோலி – ரோஹித் சர்மா ஓப்பனிங்கை மாற்றலாமா?
தென் ஆப்பிரிக்காவிற்கு பயத்தை காட்டிய நெதர்லாந்து.. ஹாட்ரிக் அவமானத்திலிருந்து காப்பாற்றிய மில்லர்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
விஜய் கோட் வசூல் நிலவரம்! Vijay Goat box office collection
குஜராத்தில் கனமழை, வெள்ளம் - 29 பேர் பலி !
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!