INDIAN 7

Tamil News & polling

ரோஹித் சர்மாவுக்கு பணம் முக்கியமில்ல.. மும்பை அணி சாதாரண வீரராகவே விளையாடுவார்!

29 ஆகஸ்ட் 2024 04:30 AM | views : 716
Nature

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. எனவே அனைத்து ஐபிஎல் அணிகளும் முக்கியமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க உள்ளன. அது போன்ற சூழ்நிலையில் நிறைய அணிகள் தங்களுடைய நட்சத்திர வீரர்களை கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை தக்க வைக்குமா அல்லது விடுவிக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த அவர் மும்பை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றியுள்ளார். இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கடந்த ஐபிஎல் தொடரில் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மெகா ஏலத்துக்கு முன் அவரை மும்பை நிர்வாகம் கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் கூட சீனியர் என்று பார்க்காமல் தம்மிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை பறித்த மும்பை அணியிலிருந்து ரோஹித் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்து கழற்றி விட்ட மும்பை அணியிலிருந்து ரோஹித் வெளியேற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

அது போன்ற நிலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை 50 கோடிகள் கொடுத்து வாங்க பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு பணம் பெரிதல்ல என்று ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். எனவே மும்பை அணியில் ரோஹித் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அவர் கணித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “உண்மையில் ரோஹித் போல நீங்கள் சிந்தித்தால் அது தவறில்லை. அதாவது இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் பலமுறை மும்பை அணியை தலைமை தாங்கியுள்ளார். எனவே கேப்டனாக இல்லை என்றால் கூட மும்பை அணிக்காக ரோஹித் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடுவார்”


“குறிப்பாக மும்பை அணிக்காக சாதாரண வீரராக விளையாடினாலே அது சூப்பராக இருக்கும் என்று ரோகித் உணர்வார். ரோஹித் சர்மா போன்ற சில வீரர்களுக்கு கேரியரின் இந்த சமயத்தில் பணம் பெரிதல்ல. அதுவே முக்கியம்” என்று கூறினார். அவர் கூறுவது போல பணத்தை தாண்டி தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்காக ரோஹித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Like
2
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்