நல்ல கதைதான்... வாழை கதை விவகாரம்; சோ.தர்மனுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான படம் வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
படத்தை பார்த்த இயக்குநர்கள், பொதுமக்கள் என அனைவரும் படத்தை பாராட்டியே பேசியிருந்தனர். இயக்குநர் பாலா, நடிகர் சூரி ஆகியோர் மாரி செல்வராஜை கட்டிபிடித்து முத்தமிட்டு பாராட்டியது பெரிதும் பேசப்பட்டது.
இதனிடையே, வாழை திரைப்படம் தன்னுடைய சிறுவயதில் நடந்த சம்பவம் என்றும், வாழைத்தாரை சுமந்து சென்ற தனது சகோதரியின் நினைவாக இந்த படத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், வாழை திரைப்படம், 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதையின் தொகுப்பு என்று சாகித்ய அகாடமி விருத
வென்ற எழுத்தாளர் சோ.தர்மன்
தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் நீர்ப்பழி எனும் சிறுகதையின் வாழையடி எனும் தொகுப்பில் இருந்து வாழை திரைப்படத்தில் வரும் பிரச்னைகளை கதையாக எழுதி இருப்பேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத் தான், அவர் காட்சி ஊடகத்தில் வாழை எனும் திரைப்படமாக காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒரே பிரச்சனையை பல்வேறு வடிவங்களில் கையாண்டு உள்ளோம். என்னுடைய கதை வாழைப்படமாக வந்திருப்பது மகிழ்ச்சிதான். கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவும் இல்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாழை தனது சிறு வயது கதை என அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், எழுத்தர் சோ. தர்மனின் இந்த பேச்சு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தக் குற்றாச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.
இந்த நிலையில், இது தன்னுடைய கதைதான் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அதில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி, "எனக் குறிப்பிட்டிருந்தார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!