INDIAN 7

Tamil News & polling

ஸ்காட்லாந்தை பொளந்த டிராவிஸ் ஹெட்.. மிரட்டல் உலக சாதனை!

04 செப்டம்பர் 2024 05:17 PM | views : 832
Nature

ஸ்காட்லாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி எடின்பர்க் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து போராடி 20 ஓவரில் 154-9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 28, கேப்டன் பேரிங்டன் 23, மேத்தியூ க்ராஸ் 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக சீன் அபோட் 3, ஆடம் ஜாம்பா 2, சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து 155 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அறிமுக வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இருப்பினும் மற்றொரு நட்சத்திர துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் சுமாராக பந்து வீசிய ஸ்காட்லாந்து பவுலர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கினார். சாதாரணமாகவே அதிரடியாக விளையாடக் கூடிய அவர் கத்துக்குட்டியான ஸ்காட்லாந்து பவுலர்களுக்கு கருணை காட்டாமல் 17 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் மிட்சேல் மார்ஷ் 39 (12) ரன்கள் விளாசி அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 80 (25) ரன்களை 320 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இறுதியில் ஜோஸ் இங்லீஷ் 27* (13) ரன்கள் எடுத்ததால் 9.4 ஓவரிலேயே 156-3 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் சுமாராக விளையாடிய ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வாட் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 6 ஓவர்களுக்குள் 73 ரன்கள் குவித்தார்.


இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் 6 ஓவர்களுக்குள் 67 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு அசத்தலாக விளையாடிய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Like
0
    Dislike
1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்