இன்று அதிகாலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ரா பாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு விடுதி அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையிலிருந்த துணிகளிலும் பொருட்களிலும் தீப்பிடித்து, பக்கத்து அறைகளுக்கும் தீ பரவியது.
திடீர் தீ விபத்து காரணமாக விடுதியில் தங்கி இருந்த பெண்கள் அலறியடித்தப்படியே வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் பிரிட்ஜ் வெடித்த அறையில் தங்கியிருந்த பரிமளாசுந்தரி (50), சரண்யா(22) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மகளிர் விடுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தீ விபத்தில் காயமடைந்தும், கரும்புகையில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டும் 5க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன்
அண்ணாமலை
அன்புமணி
அதிக வெயில்
கூட்ட நெரிசல்
தண்ணீர் வசதி இல்லாமை
திட்டமிடல் இல்லாமை
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் திருமண நிச்சயதார்த்தம்!
வேட்டையன் படத்தினால் கொந்தளிக்கும் கோவில்பட்டி.. என்னதான் பிரச்னை?
அந்தரங்க லீக் வீடியோவுக்கு நச் பதில் கொடுத்த ஓவியா !
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
டீ குடிக்க கூப்பிட்டவரின் மண்டையை பீர் பாட்டிலால் பொளந்த கணவன் மனைவி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! - உதயநிதி ஸ்டாலின்
மனைவியை கணவன் வன்புணர்வு செய்வது குற்றமாகாது - மத்திய அரசு தடாலடி
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!