விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்கி எப்போதும் லைம் லைட்டில் இருப்பார்.
இவர் திருமணம் குறித்த சர்ச்சைகள் எப்போதும் மீடியாவில் பரபரப்பாக பேசப்படும்.பிக் பாஸ் சென்ற வனிதா விஜயகுமார் அதன் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பேசுபொருள் ஆனார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த வனிதா விஜயகுமாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 17 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அவர் கமிட்டானார்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகைகளில் இவரும் ஒருவர். அதேசமயம் இவருடைய பர்சனல் வாழ்க்கையை பற்றிய செய்திகளும் ரசிகர்களிடம் அதிக கவனம் பெறும். முதலில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்ட வனிதா, அவரை விவாகரத்து செய்து ராஜன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்து ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின் பால்ராஜ் என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் ராபர்ட் மாஸ்டரை வனிதா விஜயகுமார் கடற்கரை ஓரத்தில் வைத்து புரோபோஸ் செய்வது போன்றும் அக்டோபர் 5-ம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அதில் எழுதி இருந்தது. பார்ப்பதற்கு திருமண அழைப்பிதழ் போலவே இருப்பதால் வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவதால் இது அந்த படத்திற்கான அழைப்பிதழாகவும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். இதில் எது உண்மை என்பது அக்டோபர் 5ஆம் தேதி தெரிந்துவிடும்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
கங்குவா பட விமர்சனம்!
முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் காலமானார்
மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்!
சென்னையில் 1 மணி வரை மழை நீடிக்கும்.. 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!