INDIAN 7

Tamil News & polling

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?

20 அக்டோபர் 2024 03:42 PM | views : 927
Nature

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?
-----------------------------------------------------------
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா?

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண்ணே ஒரு பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும்

அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே
செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல்

கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல்

இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும். உள்ளது

பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக.

பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ

அது போல்
"இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்"அதை பட்டுபோக விடாமல்

அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை
வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே

பழமும் கொடுக்கிறார்கள். திருமணத்தில். ...... 🙏

தமிழர் கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் வெறும் மூடநம்பிக்கை இல்லை.

Like
3
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்