INDIAN 7

Tamil News & polling

அடுப்பில் சடலமாக கிடந்த சீக்கிய பெண்.. கனடாவில் பரபரப்பு சம்பவம்..!

23 அக்டோபர் 2024 04:23 PM | views : 534
Nature

கனடாவில் வால்மார்ட்டில் வாக்-இன் ஓவனுக்குள் 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் பிணமாக கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை தெரிவிக்கவில்லை.

போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்