நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் குவித்ததால் 204-6 என்ற நிலையிலிருந்து நியூசிலாந்தை 259க்கு சுருட்டிய இந்தியாவுக்கு தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடும் இந்திய அணி முதல் நாள் முடிவில் 16-1 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா டக் அவுட்டான நிலையில் களத்தில் கில் 10*, ஜெய்ஸ்வால் 6* ரன்களுடன் உள்ளனர்.
முன்னதாக இந்தப் போட்டியில் உணவு இடைவெளிக்கு பின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக வீசி விக்கெட்டுகளை சாய்த்தார். அப்போது 8 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் பேட்டிங் செய்ய வந்தார். அவரை அவுட்டாக்குவதற்காக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ராஜதந்திரத்தை வகுத்தார்.
குறிப்பாக “வாஷி இவருக்கு கொஞ்சம் ஃபுல்லாக (லென்த்) வீசுங்கள். அப்படியே கொஞ்சம் பந்தை லைனுக்கு வெளியே வையுங்கள்” என்று வாஷிங்டன் சுந்தருக்கு இந்தியில் ரிஷப் பண்ட் திட்டத்தை கொடுத்தார். அஜஸ் படேலுக்கு ஹிந்தி தெரியாது என்று நினைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் அந்த ஆலோசனையை கொடுத்தார். அதை அப்படியே வாஷிங்டன் சுந்தரும் பின்பற்றி அடுத்த பந்தை வீசினார்.
ஆனால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அஜஸ் படேல் ஓரளவு இந்தி நன்றாக தெரிந்தவர். அதனால் ரிஷப் பண்ட் சொன்னது போல் வீசிய வாஷிங்டன் சுந்தர் பந்தை அவர் அழகாக தூக்கியடித்து பவுண்டரி பறக்க விட்டார். அதைப் பார்த்து வியப்படைந்த ரிஷப் பண்ட் “அடடே இவருக்கு ஹிந்தி தெரியும் என்பது எனக்கு எப்படி தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அந்த வகையில் ரிஷப் பண்ட் ராஜதந்திர திட்டம் அந்த இடத்தில் தோல்வியுற்றது என்றே சொல்லலாம். இருப்பினும் 45 மாதங்கள் கழித்து இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் புனே மைதானத்தில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்தார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக மூன்றாவது சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்த அவர் தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!