மதுரையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் மழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறியது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதம் மழை பெய்தததாக கூறப்படுகிறது.
இந்த கனமழையால் முல்லை நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆலங்குளம கண்மாய் நிரம்பியதுதான். முல்லை நகர் கிருஷ்ணாபுரம் காலனி 8-வது தெரு மற்றும் அதன் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நேற்று மாலையுடன் மழை நின்றாலும் இந்த பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளதால் மக்கள் மாடி மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
வெள்ளம் வடியததால் மக்களின் இயல்பு வாழ்த்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேற்று வந்து பார்வையிட்டனர். வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கு பணிகளை மெற்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் இன்று காலை வரை யாரும் வரவில்லை. இப்படியே இருந்தால் காபி, டீ, கஞ்சி காய்த்து குடிப்பது எப்படி என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சர் மூர்த்தி வெள்ள நீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்குள் வெள்ள நீர் அகற்றும பணி முழுமையாக நிறைவு பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!