POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

மதுரையில் 4.5 செ.மீ. கனமழை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

1 year ago 26 அக்டோபர் 2024 03:11 AM | views : 204
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

புறநகர் பகுதிகளான புதூர், சர்வேயர் காலனி, பனங்காடி, பாரத நகர்,பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த முதியோர்கள் கடும் அவதியடைந்தனர்.

நகர் பகுதியில் காலை முதல் மதியம் 2 மணி வரை மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் வானம் மேகமூட்டமாக மாறி சாரல் மழையாக பெய்த வண்ணமாக இருந்தது.

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி, அல்லிகுண்டம், வாலாந்தூர், செல்லம்பட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கொங்கபட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு நீராவி மேட்டுத்தெரு பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

வெள்ளிக்கிழமை அதாவது நேற்று காலை முதல் மாலை வரை 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 15 நிமிடத்தில் 4.5 செ.மீட்டர் கொட்டித்தீர்த்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மதுரை கூடல் நகர் பொதிகை நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் புகுந்த மழைநீரின் நடுவே கட்டிலில் படுத்திருக்கும் மூதாட்டிகள்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் PMK TTV DHINAKARAN AIADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN பாமக காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் இந்திய அணி முக ஸ்டாலின் CONGRESS கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் சீமான் கைது தமிழகம் சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI COIMBATORE கொலை KEERTHY SURESH THIRUMAVALAVAN தேவர் INDIAN CRICKET TEAM OPS வன்னியர் அமமுக UDHAYANIDHI STALIN SURIYA கொரோனா சூர்யா நெல்லை NELLAI PARLIAMENT ELECTION தமிழ்நாடு மதுரை ஓபிஎஸ் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை தென்காசி AJITH கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை பாலியல் தொல்லை அஜித் மோடி PRIME MINISTER MODI CSK BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION அன்புமணி ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி