Tamil News & polling
சுதந்திர போராட்ட காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவின் தமிழக அரசியலிலும் சரி, நான் ஒரு இந்து சுத்தமான இந்து என்ற உணர்வோடு நெற்றிநிறைய விபூதியோடு ஆகசிறந்த சனாதனவாதி என தன்னை அடையாளபடுத்தியவர் பசும்பொன் தேவர் ஒருவர்தான்
கருணாநிதி, அண்ணாதுரை, காமராஜர், ஜீவானந்தம், ராம்சந்தர் என யார் நெற்றியிலும் பார்க்கமுடியாத விபூதி தேவர் நெற்றியில்தான் இருந்தது
இவர்கள் யாருமே செல்லாத கோவில்களுக்கு தேவர்தான் அனுதினமும் சென்றார், உபன்யாசம் சொற்பொழிவுகளை செய்தார்
அவருக்கென பெரும் கூட்டம் திரள அவரின் ஜாதி முக்கியமே அல்ல, எந்த சாதியில் அவர் பிறந்திருந்தாலும் அந்த தைரியமான அதே நேரம் மகா பக்தியான, சுயநலமில்லா தேசபற்றுக்காக அவர் பெரும் இடம் அடைந்திருக்கத்தான் செய்வார்
அவருக்கு தேவர் சமூகம் தாண்டியும் கூட்டம் இருந்தது, எல்லா மதத்திலும் சாதியிலும் அவருக்கு அபிமானிகள் இருந்தார்கள்
தேவர் இருந்தவரை கமுதி ராமநாதபுரம் மதுரை என எல்லா இடமும் இந்து ஆலயங்களில் மட்டுமல்ல கிறிஸ்தவ ஆலயத்திலும் சாதி சிக்கலும் இல்லை, சண்டையுமில்லை
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் சாதிசண்டை வந்தபோது அய்யா ராம்சாமி வழக்கம் போல் பதுங்கி கொள்ள, அங்கே பாதிக்கபடவர்கள் தேவரிடம்தான் உதவி கோரினார்கள், தேவரின் சீற்றத்துக்கு பின்பே அங்கு எல்லா சாதிக்கும் உரிமை கிடைத்தது
அப்படியான தேவரை இந்து என்பதற்காகவும், காங்கிரசை எதிர்க்கின்றார் என்பதற்காகவும் திட்டமிட்டு சிலர் பழிவாங்க உருவாக்கபட்டதுதான் சாதி பிம்பம்
காங்கிரஸ் பிரிட்டிசாரின் நேரடி கைகூலி இயக்கம், திமுக மறைமுக இயக்கம், கம்யூனிஸ்டுகள் இந்து மற்றுமம் இந்திய எதிரிகள் எனும் நிலையில் தேவர் பொது எதிரியாக்கபட்டார்
அந்த கொடுமையில் உருவானதுதான் அந்த சர்ச்சைகள்
தேவரின் பின்னணி பற்றி அலசுவோர் குபீர் போராளியான இம்மானுவேல் சேகரன் பற்றி அதிகம் ஆராயமாட்டார்கள், அவர் இந்திய ராணுவத்தின் எந்த பிரிவில் இருந்தார், எந்த போர்களில் பங்குபெற்றார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது
அங்கே காலம் காலமாக பெரிய சாதிய மோதல் இல்லா நிலையில் இவர் காலத்தில் மட்டும் எப்படி சர்ச்சை வெடித்தது என்பது பற்றி யாரும் பேசமாட்டார்கள்
இம்மானுவேல் சேகரன் படுகொலை என்பவர்கள் கீழதூவல் கிராமத்தில் 7 மறவர்கள் அன்றைய காவல்துறையால் கண்களை கட்டி சுடபட்டதை பற்றி பேசமாட்டார்கள்
அந்த சிவகங்கை, ராமநாதபுரம் என்பது பழைய ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் வாரிசுகள் பஞ்ச பாண்டியராக வாழ்ந்த பகுதி எக்காலமும் அங்கு இந்துமதமும் தேசியமும் மகா முக்கியம்
அந்த பிராந்தியத்தை கிறிஸ்தவமயமாக்க எத்தனையோ பேர் முயன்றார்கள், எனும் அருணாந்தன் எனும் ஜாண் டி பிரிட்டோ அவன் ஒரு ஐரோப்பியன்
அவன் இயேசு சபை துறவியாக வந்தான் மதமாற்றங்களில் ஈடுபட்டான் , 1673ல் அவன் மதுரை பக்கம் மதமாற்றம் செய்தான், ராமநாதபுரம் பக்கமும் வந்தான்
அக்காலகட்டங்களில் வீரசிவாஜி நெருப்பென இருந்தான், அவன் 1679ல் சிதம்பரம் வரை வந்திருந்தான், பூரண இந்துராஜ்ஜியம் மதமாற்றம் என்றால் கடும்தண்டனை என சீறி நின்ற வீரசிவாஜிக்கு எல்லா மன்னர்களும் அஞ்சினர்
அவன் மிரட்டல் காரணமாக மதமாற்றிகலெல்லாம் அலறி அடித்து ஓடினார்கள், அப்படி தப்பி ஓடியவன் இந்த பிரிட்டோ ஐரோப்பாவுக்கே ஓடினான்
ஆனால் வீரசிவாஜி மறைந்து சாம்பாஜியும் கொல்லபட்ட பின் ஆற்காடு நவாப் என மொகலாய பிரதிதி தமிழகம் வந்தபின் எல்லாம் மாறிற்று
நாயக்க மன்னர்களான மங்கம்மாவோ இன்னும் பல நாயக்கர்களோ மராட்டியருடன் சேர்ந்து மொகலாயரை எதிர்க்கவில்லை மாறாக பிரிட்டிசாரை வரவேற்க தொடங்கினார்கள்
அப்போது மறுபடியும் இங்கே 1690களில் வந்தான் பிரிட்டோ
இந்துக்களுக்கு வலுவான மன்னர் இல்லை, ஆற்காடு நவாப் அவுரங்கசீப்பின் பிரதிநிதி அவனுக்கு நாயக்க் மன்னர்கள் கப்பம் கட்டவேண்டும், ராமநாதபுர இந்து மறவர் மன்னனும் கடும் சிக்கலில் இருந்தான் எனும் அந்த பலவீனமான காலகட்டட்தில் இந்த பிரிட்டோ ராமநாதபுரம் பக்கம் பெரும் மதமாற்றம் செய்தான்
அப்போது ஒரு சிற்றரசன் தடியதேவனை மதம் மாற்றினான், அந்த தடியதேவனுக்கு பல மனைவியர் இருந்தனர் அவர்களில் ஒருத்தி ராமராந்தபுர மன்னன் கிழவன் சேதுபதியின் மகள்
கிறிஸ்தவ சட்டபடி ஒரு மனைவிதான் உண்டு அதனால் மற்ற மனைவியரை வாழா வெட்டி என அவரவர் வீட்டுக்கு அனுப்பினான் தடியதேவன்
இதுகண்டு வெகுந்தெழுந்தான் கிழவன் சேதுபதி "இந்துமதம் இந்த மண்ணின் மதம், அங்கே எக்காலமும் வாழாவெட்டி , விவாகரத்து என்பது ஒரு காலமுமில்லை
இந்துமதம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது, ஒரு ஆண் தன்னால் காக்க இயலுமென்றால் பல மனைவியரை மணக்க அனுமதிக்கின்றது, , எந்நிலையிலும் விவாகரத்து என ஒன்று அங்கு இல்லை
கணவன்மேல் வெறுப்பு என்றால் மனைவி தனித்துவாழ அது அனுமதிக்கின்றதே அன்றி கணவன் மனைவியினை விரட்டி அடித்து வாழாவெட்டியாக்க அது அனுமதிக்கவில்லை
இந்துக்கள் வாழ்வில் பெண்களை காப்பதே தர்மம், அதை தகர்க்கும் இந்த அந்நிய கலாச்சாரமும் மதமும் ஆபத்து
அரசனுக்கு ஏன் பல மனைவியரை இந்துமதம் அனுமதித்தது, அரசன் வழி வழி வந்த ராஜபாரம்பரியத்தில் வந்தவன் அவன் பிள்ளைகளில் ஒன்று அவனைபோல வரலாம், அவன் சாயலில் வரலாம். ஒரு மனைவியிடம் அவன் அதை பெறமுடியாதபோது சில பெண்களை அனுமதிக்கலாம்
அவனை போல் ஒன்று பிறந்தாலும் நாட்டுக்கு நல்லது என்பதற்காகவே இதை அனுமதித்தது, இதை அழித்தால் அரச பாரம்பரியம் அழியும், தலைவனில்லா தேசமாக ராஜ்ஜியம் குழம்பும்
ஐரோப்பிய மதமாற்றிகள் சதியின் முதல் கட்டம் இது" என கொந்தளித்தவன் அந்த ஜாண் டி பிரிட்டோ என்பவனை தலைவெட்டி கொன்றான்
தடியதேவன் பின் ஒழுங்காக தாய்மதம் திரும்பினான்
இப்படி நெருப்பாக இருந்த பிரதேசம் அது, அதனால்தான் வட இலங்கையினை முழுக்க கிறிஸ்தவ பிடிக்குள் மாற்றிய போர்ச்சுகீசியர், பிரிட்டிசாரெல்லாம் இப்பக்கம் வாலாட்ட முடியவில்லை
எல்லா காலமும் அம்மண் இந்துமதம், தேசியம் என காத்தே வந்தது
முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், மருதுபாண்டியர் என அந்த வரலாறு தொடர்ந்தது
ஜியு போப் எனும் மிஷனரி கூட தோற்று ஓடிய மண் அது, அவனால் அங்கே மதமாற்றம் செய்யமுடியவில்லை, அதன் பின்பே அவன் திருகுறள் படிக்க சென்றான்
இன்று இம்மானுவேல் சேகரன் என பொங்கும் யாரும் பிரிட்டிசாரால் அதே மண்ணில் கொல்லபட்ட 500 பேர் பற்றி பேசமாட்டார்கள்
அதனால்தான் சுவாமி விவேகானந்தர் இந்த மன்னர்களை சந்தித்து உதவிபெற்று அமெரிக்காவுக்கு சென்று இந்துமதம் விதைத்துவிட்டு மீண்டும் அவர்களையே முதலில் சந்தித்தார்
அப்படியான மண் அது
அந்த பார்ம்பரியத்தில் வந்தவர்தான் முத்துராமலிங்க தேவர், அவர் அந்த பாரம்பரியமாகவே வாழ்ந்தார், போராடினார், அப்படி தூய இந்துவாகவே மறைந்தார்
அவர் இருந்த்வரை அண்ணாதுரை, கருணாநிதி என யாரும் நாத்திகம் பேசிதென்னகம் வந்ததில்லை, ராமசாமி வர நினைத்ததுமில்லை
இப்படிபட்ட இந்துவினைத்தான் திருநீறே அணியாத காமராஜர் எனும் நேருபக்தன் பல வகையில் முடக்கினார், பழிகள் பல சுமத்தபட்டன
அதில் எந்த உண்மையுமில்லை, இருந்த ஒரே உண்மை தேவர் காந்தி, நேருவுக்கு எதிரானவர் மகா சுத்தமான இந்து என்பதாலே அவர் குறிவைக்கபட்டார்
உண்மை எப்போதும் மெதுவாகத்தான் வெளிவரும், அப்படி தேவரின் பெருமைகளும் அவருக்கு காங்கிரசும் இன்னும் பல நாசகார கட்சிகளும் செய்த சதி, அவர் ஒரு இந்து என்பதற்காக செய்த சதி, நேரு என்பவரை ஒரு சராசரி மனிதனாக கூட கருதாமல் அவர் பேசினார் என்பதற்காக பழிவாங்கிய சதி என ஒவ்வொன்றாக வெளிவரும், காலம் அதை செய்யும்
அவர் பசும்பொன்னில் வாழ்ந்த சித்தர், முருகபெருமானுக்காக வாழ்ந்த தேசநலமிக்க சித்தர் என்பதை காலம் ஒருநாள் உலகுக்கு சொல்லும்
(ராமநாதபுரம் என்பது அப்பழுக்கற்ற இந்துமன்னர்களும், சிவனடியார்களும் வாழ்ந்த வாழ்கின்ற இடம்
அங்கே இந்துக்களின் எல்லா முத்திரைகளும் உண்டு, அப்துல் கலாம் போன்ற மாபெரும் தேசாபிமானிகள் அங்கிருந்துதான் வந்தார்கள்
நிச்சயம் மோடி எனும் கர்மயோகி செல்ல வேண்டிய இடங்களில் ராமநாதபுர வரலாற்று இடங்களும் ஆலயங்களும் அய்யா பசும்பொன் தேவரின் சமாதியும் உண்டு
ஆனால் தமிழக பாஜக அதை செய்யுமா என்றால் செய்யாது, இங்கு தெய்வீகம் தேசியம் வளர்ந்துவிட கூடாது என்பதில் அவர்களுக்குள்ள பெரும் அக்கறை அப்படி)

விஜய் Vijay சென்னை Chennai DMK திமுக TVK அண்ணாமலை Annamalai தவெக பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK திருமாவளவன் சீமான் மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு ADMK டிடிவி தினகரன் செங்கோட்டையன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் PMK Seeman Sengottaiyan முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை பாமக வானிலை ஆய்வு மையம் Tamilaga Vettri Kazhagam கைது Edappadi Palaniswami Congress