INDIAN 7

Tamil News & polling

திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்

01 நவம்பர் 2024 03:49 PM | views : 949
Nature

ஈ.வெ.ராமசாமியை பார்த்து உன் கட்சிக்கு ஏன் திராவிட கழகம் என்று பெயர் வைத்தாய்? ஏன் தமிழக கழகம் என்று பெயர் சூட்டவில்லை என்று அன்றே கேட்டார் "இராமநாதபுரம் ராஜா".

வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் தேர்தல் நடத்திய போது இந்திய மக்கள் சார்பாக காந்தியின் கட்சியும் வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக ஜஸ்டிஸ் லீக் கட்சியும் களமிறங்கியது.

அந்த ஜஸ்டிஸ் லீக் கட்சியில் இருந்தவர் தான் "பெரியார்" என்னும் "ஈ.வெ.ராமசாமி‌". பிறகு தனியாக வந்து தொடங்கிய கட்சி தான் "திராவிட கழகம்".

இந்திய மக்களை சரியாக புரிந்து வைத்திருந்த வெள்ளைக்காரன் "இராமநாதபுரம் ராஜா"வை அவன் சார்பாக போட்டியிட வைத்தால், ராஜாவின் விசுவாசிகள் வாக்களிப்பார்கள் என்று தெரிந்து வைத்திருந்தான்.

அப்போது வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈ.வெ.ராமசாமியைப் பார்த்து உன் கட்சிக்கு ஏன் "திராவிட கழகம்" என்று பெயர் வைத்தாய் என்று கேட்டார்.

தான் கன்னடன் என்பதால் "திராவிடக் கழகம்" என்று பெயர் வைத்து ஊரை ஏமாற்றிய ஈ.வெ.ராமசாமி. ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கியவர் தான் ஐயா "முத்துராமலிங்கத் தேவர்". வெற்றியும் பெற்றார்.

தேர்தலுக்கு பிறகு டெல்லிக்கு சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அங்கு காந்திக்கும் நேதாஜிக்கும் வாக்குவாதம். வெள்ளையனை அடித்து விரட்ட வேண்டும் என்று கூறினார் நேதாஜி. இல்லை அகிம்சை முறையில் தான் செய்ய வேண்டும் என்றார் காந்தி.

நேதாஜி காங்கிரஸை விட்டு பிரிந்தார். ஐயா முத்துராமலிங்கத் தேவர் காந்திக்கு ஆதரவாக இருந்திருந்தால் பதவி கிடைத்திருக்கும்.

பதவி வேண்டாம் தேசம் தான் முக்கியம் என்று நேதாஜியின் பக்கம் சென்றார் ஐயா முத்துராமலிங்கத் தேவர். அப்போது துவங்கப்பட்டது தான் "இந்தியன் நேஷனல் ஆர்மி".

"திராவிட கூட்டத்தை அன்றே பந்தாடியவர் தான் ஐயா முத்துராமலிங்கத் தேவர்".

ஆனால் தேவர் ஜாதி தலைவராக சித்தரிக்கப்பட்டார்.

தேசியவாதி தேவர் ஐயாவின் பக்கம் நிற்காமல் ஆங்கிலேயருடன் கைக்கோர்த்த ஈ.வெ.ராவின் பக்கம் நிற்கிறார்கள் தமிழ் மக்கள்.

சிந்தியுங்கள்.

Like
2
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்