INDIAN 7

Tamil News & polling

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? விளக்கம் அளித்த திருமாவளவன்

05 நவம்பர் 2024 08:45 AM | views : 844
Nature

கே.கே.நகர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து முன்பு கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.

ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

இப்போது கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். 2 கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.

நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.

எங்களுக்கான கூட்டணியை சிதைக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.

2026-ம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து ஓராண்டு ஆகிறது. இதில் பங்கேற்க ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள்.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு முன்பாக விஜய்யை அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மை விழுங்கி இருக்கும். இந்தி தமிழை விழுங்கி இருக்கும்.

திராவிட கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான். ஆனால் திராவிட எதிர்ப்பை திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஸ்டாலினே முதல்வராக பதவியேற்பார் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி விஜய் 2வது

Image விஜயின் 'ஜனநாயகன்' படத்திலிருந்து ராவண மவன்டா பாடல் வெளியானது! சென்னை: தளபதி விஜய் நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'ஜனநாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொட்டுள்ளது. இந்த நிலையில், ரசிகர்களுக்கு

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற

Image புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப்

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல் உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:- இது ஒரு அன்பான தருணம்,

Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்