நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல் எங்கே இருந்து தொடங்கியது அதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.
நயன்தாராவின் பிறந்தநாளில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் அவரது டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் இதெல்லாம் குறித்து அந்த டாக்குமெண்ட்ரியில் இடம்பெறுகிறது. இயக்குநர் விக்னேஷ்சிவனுடனான காதல் மலர்ந்த படம் ‘நானும் ரெளடிதான்’. அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி அளிக்கவில்லை.
படத்தின் பிடிஎஸ் காட்சிகளை இந்த டாக்குமெண்ட்ரியின் டிரெய்லரில் பார்த்த தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி நயன்தாராவுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். பொதுவெளியில் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ளும் தனுஷ் தன் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தின் காரணமாகவே டாக்குமெண்ட்ரி காட்சிகளுக்கு இரண்டு வருடங்கள் அனுமதி தராமல் இழுத்தடித்து இப்போது வக்கீல் நோட்டீஸூம் அனுப்பியிருக்கிறார் என நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை தனுஷூக்கும் எதிராக வெளியிட்டுள்ளார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன் - தனுஷூக்கு இடையில் ஆரம்பித்த நட்பு ‘எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷூக்காக சம்பளம் வாங்கிக் கொள்ளாமலேயே ஒரு பாட்டுக்கும் நயன்தாரா நடனம் ஆடும் அளவிற்கு வலுவாகவே இருந்தது. பின்பு எங்கிருந்து ஆரம்பித்தது இந்த விரிசல்?
விஜய்சேதுபதியை வைத்து தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க தனுஷ்தான் கேட்டார். நண்பனுக்காக சம்மதித்தார் நயன். பின்பு விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காதல் மலர நயன்தாராவுக்கும் தனுஷூடான நட்பின் நெருக்கம் குறைந்தது. ஒருமுறை நயன்தாராவை தனுஷ் பார்க்க வந்தபோது அங்கு விக்னேஷ்சிவன் இருந்ததால் தனுஷ் திருப்பி அனுப்பப்பட்டதால் அவருக்கு கோபம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதுவே, தனுஷ்- நயன்தாரா விரிசலின் ஆரம்பப்புள்ளி. காதலால் இருவரும் படத்தில் சரியாக கவனம் செலுத்தாததால் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், இந்தப் படத்தால் தனக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தனுஷ் குற்றம் சொன்னார். இதனால், காயப்பட்ட நயன்தாரா தனுஷிடம் அந்த நஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதை மனதில் வைத்தே தனுஷ் இப்போது நயன்தாரா டாக்குமெண்ட்ரியில் ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் அனுமதி கொடுக்கவில்லை என நயன்தாரா குற்றம் சொல்லியிருக்கிறார்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!