INDIAN 7

Tamil News & polling

தேவையான இடத்தில் சரியான வார்த்தை - சிறுகதை

20 நவம்பர் 2024 02:30 PM | views : 828
Nature

பேங்க்-ல் கேஷியரிடம் 500 ரூபாய் பணக்கட்டை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...

"சார் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா"ன்னுதான் கேட்டேன்!

பேங்க் கேஷியர் கொஞ்சம் கோவமா "ஏன் பணம் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார். சரியா இருக்கும்...

ரொம்ப பிஸியான நேரம். இப்ப எண்ணித்தர முடியாது!" அப்படீனாரு!

"இல்ல சார்! ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு!"ன்னேன்!

சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி, மெஷினில் இரண்டு தரமும், கையால் ஒரு தரமும் எண்ணி கொடுத்தார்...!!

இதனால் அறியப்பட்ட நீதி...!!

"தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்!"

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்