POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

1 year ago 25 நவம்பர் 2024 01:09 PM | views : 230
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நடமாடும் மருத்துவமனை மூலம் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள உபயோகமற்ற பொருட்களை மழைநீர் விழாத இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும். உபயோகமற்ற பொருட்களை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.






தென்காசி மாவட்டத்தில் எலி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பதால் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்றும், குடிநீர் குழாய் உடைப்புகள் உடனடியாக சரி செய்யவும், திடக்கழிவுகள் தேக்கமடையாமல் அப்புறப்படுத்தவும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

எலி காய்ச்சலால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படலாம். எனவே மஞ்சள்காமாலை நோய் அறிகுறிகள் காணப்படும் நபர்கள் நாட்டு மருந்து சாப்பிட்டாலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ள பரிசோதனை வசதிகளை பயன்படுத்தி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.






அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து அருந்த வேண்டும். காய்ச்சல், சளி இருப்பவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK TTV DHINAKARAN PMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் பாமக உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் கோவை இந்திய அணி முக ஸ்டாலின் CONGRESS திருமாவளவன் ரஜினிகாந்த் பிரதமர் மோடி தமிழகம் EDAPPADI PALANISWAMI சீமான் COIMBATORE கைது சட்டசபை தேர்தல் கொலை INDIAN CRICKET TEAM வன்னியர் தேவர் THIRUMAVALAVAN UDHAYANIDHI STALIN KEERTHY SURESH OPS அமமுக SURIYA ஓபிஎஸ் கொரோனா AJITH தென்காசி வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மதுரை NELLAI நெல்லை சூர்யா TAMIL ACTRESS PARLIAMENT ELECTION அஜித் ASSEMBLY ELECTIONS CSK பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL தூத்துக்குடி PRIME MINISTER MODI மோடி தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி விடுமுறை கள்ளக்காதல் ELECTION COMMISSION