INDIAN 7

Tamil News & polling

பான் வேர்ல்டு ஸ்டாராகும் யோகி பாபு - ஹாலிவுட் படம் ரெடி!

26 நவம்பர் 2024 04:38 PM | views : 687
Nature

இன்று ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் சிறந்த காமெடியனாகவும் வலம் வரும் யோகி பாபு கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தினால் இளம் வயதிலேயே பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவருடைய இளமை காலத்தை ஜம்மு காஷ்மீரில் கழித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விளையாட்டின் மீதும் பெரிய அளவில் ஆர்வம் கொண்டிருந்த யோகி பாபுவிற்கு, திரைத்துறை மீதும் பெரிய அளவிலான ஈர்ப்பு இருந்து வந்தது. இந்த சூழலில் தான் கடந்த 2000வது ஆண்டின் இறுதியில் ஒளிபரப்பாகி வந்த "லொள்ளு சபா" நிகழ்ச்சியில் நடிகராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்ற தொடங்கினார்.




தொடர்ச்சியாக "லொள்ளு சபா" நாடகத்தில் நடித்து வந்த பாபுவிற்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான "யோகி" திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் பாபு, "யோகி" பாபு என்கின்ற நடிகனாக மாறினார். தொடர்ச்சியாக தமிழில் வெளியான பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக் தொடங்கியது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "யாமிருக்க பயமேன்" திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு யோகி பாபுவிற்கான மௌசம் கூடியது. தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக மாறிய யோகி பாபுவிற்கு சைமா மற்றும் விகடன் போன்ற நிறுவனங்களும் விருதுகளை அழித்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெகு சீக்கிரத்தில் யோகி பாபு உச்ச நடிகராக மாறினார். வருடத்திற்கு 15 முதல் 20 வரைபடங்களில் வரை இப்போது அவர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திரம் மற்றும் ஹீரோ போன்ற வேடங்கள் ஏற்றும் இவர் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் பெரிய அளவில் இப்பொழுது யோகி பாபுவிற்கு வரவேற்பு இருந்து வருகிறது. இந்த 2024 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் இதுவரை 18 திரைப்படங்கள் யோகி பாபுவின் நடிப்பில் இந்த ஒரே ஆண்டில் வெளியாகி உள்ள நிலையில், பல புகழுக்கு சொந்தக்காரரான அவர், இப்போது ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.


ஏற்கனவே ஹாலிவுட் உலகில் பிரபல நடிகர் நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரையும் அறிமுகம் செய்த பிரபல தயாரிப்பாளர் டெல் கணேசன், தற்போது யோகி பாபுவை வைத்து ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். "ட்ராப் சிட்டி" என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறார் யோகி பாபு. விரைவில் திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்