INDIAN 7

Tamil News & polling

பும்ரா நம்பர் ஒன் பிளேயர் என்பதை தாண்டி நல்ல மனுஷன் - புஜாரா

02 டிசம்பர் 2024 01:24 PM | views : 822
Nature

ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா அபாரமாக விளையாடியது. குறிப்பாக 150க்கு ஆல் அவுட்டான இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்ட முக்கிய பங்காற்றினார்.

பின்னர் 2வது இன்னிங்ஸிலும் மூன்று விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த பெரிய சாதனை வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி தொடர்ந்து அசத்தி வருவதால் ஐசிசி தரவரிசையிலும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி பும்ரா சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்நிலையில் 37 வயதாகும் ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழி நடத்த ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் சரியானவர் என்று புஜாரா பாராட்டியுள்ளார். அதற்கான காரணங்கள் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சந்தேகமே இல்லாமல் அவர் நீண்ட காலம் கேப்டனாக செயல்படுவதற்கு சரியானவர். ஏனெனில் நியூஸிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது”

“அந்த கடினமான காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா இப்படி விளையாடியது. எனவே இந்திய அணியை வழி நடத்தும் திறன் அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் அணியின் வீரர். களத்தில் அவர் தமக்குத் தாமே மட்டும் பேசிக் கொள்வதில்லை. மற்ற வீரர்களிடமும் பேசுகிறார். நம்முடைய வீரர்களுக்கு ஆலோசனை தேவைப்படாத நேரங்களும் இருக்கின்றன”

“அந்த நேரங்களில் அவர் அதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில்லை. குறிப்பாக அனுபவமிக்க வீரர்கள் பந்து வீசினால் அவர் அமைதியாக இருக்கிறார். அது ஒரு நல்ல கேப்டனுக்கான அறிகுறி. மேலும் நம்பர் ஒன் வீரராக இருந்தாலும் அவர் தரையில் பண்புடன் இருக்கக்கூடியவர். சக வீரர்களுடன் நட்பாக பழகக்கூடிய அவர் உதவுவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார்”


“கிரிக்கெட்டுக்கு வெளியேயும் அவர் மிகுந்த மனிதாபிமானம் கொண்ட நபர்” என்று கூறினார். அவர் கூறுவது போல நம்பர் ஒன் பவுலராக இருந்தாலும் பும்ரா எப்பவுமே மிகவும் அடக்கமான வீரராக வலம் வருகிறார். மேலும் சக வீரர்களுடன் நல்ல நட்பை வைத்துள்ள அவர் இந்திய அணியை நீண்ட காலத்திற்கு வழி நடத்தும் தகுதி உடையவர் என்பதை சந்தேகமில்லை.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்