INDIAN 7

Tamil News & polling

2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா

06 டிசம்பர் 2024 03:14 PM | views : 758
Nature

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.

தமிழகத்தின் வெற்றிக்கு பெரியார் கொள்கைகளே காரணம். அப்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றியவர் திருமாவளவன்.

அம்பேத்கர் பற்றி தலித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தது போய், தற்போது தலித் அல்லாத விஜய்யும் பேசுகிறார்.

புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாகக்கூடிய மேடையாக இது இருக்கும்.

இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக இருந்தபோது முதல்முறையாக தமிழகம் வென்று காட்டியது.

மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.

2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது.

கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்.

சாதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் அரசியல் தான் இங்கு பெரிய பிரச்சினை.

தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீதம் தான் ஓட்டு, இங்கு மத பெரும்பான்மைக்கு ஆதரவு கிடையாது. மத பெரும்பாபன்மை என்று பாஜகவை விமர்சிக்கும் நாம், அதை தான் ஜாதியை வைத்து இங்கு செய்கிறோம்.

மலம் கலந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

25 சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா ? இதை கேட்டால் சங்கி என்று கூறுவார்கள்.

சாதியை ஒழிப்பதற்காக தான் திருமாவளவனோடு நான் கைகோர்த்தேன்.

பெரியால் கொள்கையும், அம்பேத்கர் கொள்கையும் இணைந்து பயணித்தால் புதிய மாற்றம் ஏற்படும்.

ஏழைகள் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் நகரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்