அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

By Admin | Published in செய்திகள் at டிசம்பர் 07, 2024 சனி || views : 246

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு... கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த சூழலில் திருமாவளவன் குறித்து விஜய் பேசியது தமிழக அரசியலில் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.

விஜய்யின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள். முதல்-அமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு அதை நான் பெறுவதாக இருந்தால் சரியாக இருந்திருக்கும். எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்துத் தர வேண்டியதில்லை. எல்லா நாளும் நான் பேசுவேன். அம்பேத்கரைப் பற்றி இந்த தலைமுறை பிள்ளைகள் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வாறு அவர்களிடம் சென்றாலும் அதை ஏற்றுக்கொண்டு வரவேற்கணும். அந்த வகையில் தம்பி விஜய் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்1

T.V.K. VIJAY V.C.K. THIRUMAVALAVAN N.T.K. SEEMAN த.வெ.க. விஜய் வி.சி.க. திருமாவளவன் நா.த. க. சீமான்
Whatsaap Channel
விடுகதை :

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.

விடுகதை :

வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

விடுகதை :

அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next