அல்லு அர்ஜூன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?
⚡️தெலுங்கு சினிமா துறையினருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
🔹புஷ்பா 2 படம் வெளியான முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது
🔹அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார்; மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது
🔹அப்போது சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார்
🔹பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார்; அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?
🔹போலீசார் கைது செய்வோம் என மிரட்டிய பிறகே அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறினார்
🔹இனி தெலங்கானாவில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி தரப்படாது; டிக்கெட் கட்டண உயர்வுகளும் இருக்காது
🔹அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா, கண்களை இழந்தாரா, அல்லது கிட்னியை தான் இழந்தாரா?
🔹அல்லு அர்ஜுனின் இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்று அவரை பார்க்க வேண்டிய அவசியம் என்ன?
🔹காயமடைந்த சிறுவனைப் பற்றி சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினார்களா?
🔹சினிமா பிரபலங்கள் யாராவது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று தான் பார்த்தார்களா?
- தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S