POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவது யார்?

1 year ago 07 ஜனவரி 2025 12:25 PM | views : 203
சென்னை:

ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென இறந்ததால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. முதலில் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் மறைவைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இளங்கோவனும் உடல்நலக்குறைவால் மறைந்ததால் மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்பது இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. தி.மு.க- காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி இதுபற்றி முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அப்போது அந்த கட்சிக்கு பா.ஜனதா ஆதரவளித்தது. பின்னர் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் தனி அணி அமைத்து பா.ஜனதா போட்டியிட்டது. அந்த கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று இருந்தன. கடந்த 2021-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த த.மா.கா. போட்டியிட்டது. அப்போது அக்கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டு 58,396 வாக்குகள் பெற்று இருந்தார். அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் பா.ஜனதா அல்லது அக்கூட்டணியில் உள்ள த.மா.கா இப்போது போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 2021-ல் கோமதி போட்டியிட்டு 11,629 வாக்குகள் பெற்றார். பின்னர் 2023 இடைத்தேர்தலில் மேனகா போட்டியிட்டு 10,827 வாக்குகள் பெற்றார். இங்கு நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது உறுதி.

புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரு சில நாட்களில் விடை தெரிந்து விடும்.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வருமாறு:-

திருமகன் ஈவெரா (காங்கிரஸ்)-67,300

யுவராஜா (த.மா.கா) - 58396

கோமதி (நாம் தமிழர் கட்சி)-11,629

ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) -10,005

முத்துக்குமரன் (அ.ம.மு.க.) -1204

2023 இடைத்தேர்தல் முடிவுகள்:

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.

2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.

3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.

4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK AMMK ANNAMALAI ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் PMK உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN AIADMK பாமக காங்கிரஸ் கனமழை பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கோவை இந்திய அணி CONGRESS திருமாவளவன் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI தமிழகம் பிரதமர் மோடி சீமான் சட்டசபை தேர்தல் முக ஸ்டாலின் கொலை INDIAN CRICKET TEAM KEERTHY SURESH THIRUMAVALAVAN வன்னியர் அமமுக OPS தேவர் நெல்லை மதுரை PARLIAMENT ELECTION TAMIL ACTRESS சூர்யா தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை தென்காசி AJITH SURIYA கொரோனா ஓபிஎஸ் NELLAI ASSEMBLY ELECTIONS அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் அஜித் PRIME MINISTER MODI ELECTION COMMISSION BIGG BOSS TAMIL விடுமுறை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் மோடி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை