புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் (சைல்டு ஹெல்ப் லைன்)மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!