ஆளும் திமுக அரசுக்கும் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. மேலும் அறிவாலயத்தில் இருந்து ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுப்பேன் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கி கொடுக்க முடியவில்லை, அவர் சவால் விடுகிறார் என கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். உதயநிதி ஸ்டாலின் தனியாக வரத்தயாரா? என்று அண்ணாமலை எதிர் சவால் விடுத்தார். இதனிடையே எக்ஸ் தளத்தில் கெட் அவுட் மோடி என்று திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர். இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2வது இடத்திலும் டிரெண்டானது. இந்நிலையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கெட் அவுட் ஸ்டாலின் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், காலை உணவு வழங்கும் "அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டம்" சென்னை, ஜி.கே.எம் காலனி 20வது தெரு - ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர் பாபு : அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸாக இருந்ததை போல் இப்போது நினைத்து கொண்டிருக்கிறார். அவர் போலீஸ் இல்லை. அண்ணா சாலையில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது.
அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லை பிடுங்கும் வரை ஓய மாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். தெம்பு, திராணி தைரியம் இருந்தால் அண்ணாசாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் ஒரு செங்கல்லையாவது தொட்டு பார்க்கட்டும். ஓரு அண்ணாமலை இல்லை ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அது நடக்காது என தெரிவித்துள்ளார்.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!