POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

அண்ணாமலை கீழ்பாக்கத்தில் இருக்கவேண்டியவர் - சேகர் பாபு செம தாக்கு!

1 year ago 21 பிப்ரவரி 2025 08:24 AM | views : 193
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜக - திமுக இடையே கடுமையான வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை போல் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது, "அண்ணாமலை கர்நாடகாவில் போலீசாக இருப்பதைப் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இது கர்நாடக அல்ல. அண்ணா சாலையை பகுதியில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்குவேன் என்று கூறியிருந்தார். அதற்கு தான் அண்ணாசாலை பக்கம் வரட்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த பதிலை சொல்லி இருந்தார்.

தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கல்லையாவது தொட்டு பார்க்கட்டும். திமுக நீர் பூத்த நெருப்பாக உள்ள இயக்கம். நேற்று பெய்த மழைக்கு முளைத்த காலான் அல்ல திமுக. இரும்பு முதல்வர் ஸ்டாலின் மிசாவையே சந்தித்தவர். திருமணமான கையோடு மிசாவில் சிறைக்கு சென்றவர்.


அவர்கள் தலைமையில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உள்ளனர். கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இப்படி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை, அறிவாலயத்திற்கு இயக்கத்தில் சேர வரலாம். அவர் நட்பு பாராட்ட வரலாம். அவர் செங்கல்லை பிடுங்குவேன் என்று கூறினால் எப்படி அவரை அனுமதிக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார் அமைச்சர் சேகர் பாபு.



தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலைக்கு சவால்விட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? அங்கே வரக்கூடாதா? என கேள்வி எழுப்பியது குறித்து செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, "பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர், ஒரு முதிர்ந்த அரசியல்வாதி, அப்பா தாத்தா ஸ்தானத்தை அடைந்தவர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் திமுக DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக அன்புமணி ராமதாஸ் தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் கோவை கைது ரஜினிகாந்த் இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH PARLIAMENT ELECTION அமமுக தேவர் வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி வன்னியர் தமிழ்நாடு தீபாவளி தென்காசி THIRUMAVALAVAN NELLAI AJITH TAMIL ACTRESS OPS SURIYA நெல்லை ஓபிஎஸ் சீமான் NORTHEAST MONSOON கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM தூத்துக்குடி சூர்யா அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் அஜித் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் CSK மதுரை BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION விடுமுறை